Draupadi Movie
திரௌபதி படத்தில் நடித்த தன்னுடைய மச்சானுக்கு அஜித்தும் ஷாலினியும் அறிவுரை வழங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற சகோதரர் உள்ளார்.

ரிச்சர்ட் தற்போது திரௌபதி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடித்திருப்பதை பற்றி எந்தவித பேட்டியும் கொடுக்க வேண்டாம். இயக்குனர் என்ன சொன்னாரோ அதை தான் நடித்து கொடுத்தேன் என்று மட்டும் சொல்லு என அஜித்தும் ஷாலினியும் அறிவுரை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரிச்சர்ட்டும் இது வரை இந்த படத்தை பற்றி எந்தவித பேட்டியும் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.