Valimai Movie
வலிமையில் தல அஜித்திற்கு ரெட்டை வேடமாக இருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, எச். வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற டைட்டில் வலிமை தான் என படக்குழு நம்புகின்றனர்.

மேலும் தல அஜித் இந்த படத்தில் ஸ்டைலான மீசையுடன் நடிக்க உள்ளாராம், இதனை படக்குழு சஸ்பென்ஸிற்காக மறைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் மீசையில்லாமல் நடித்துள்ளார். விரைவில் சென்னையில் தொடங்க உள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தல மீசையுடன் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இதனால் இந்த படத்திற்கு அஜித்திற்கு இரட்டை வேடம் இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக அஜித் வேதாளம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.