Ajith About T20 Cricket

கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து அஜித் கொடுத்த பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Ajith About T20 Cricket : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தற்போது அது எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் படம் சார்ந்த பிற மொழிகளிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என இருந்து வருகிறார்.

அஜித் 21, விஜய் 23 அன்று முதல் இன்று வரை தோல்வியை தழுவிய தல தளபதி படங்கள் – லிஸ்ட் உடன் இதோ!

இந்த நிலையில் இவர் பல வருடங்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதில் தல அஜித் வருடத்தின் T20 போட்டி தான் எதிர்கால கிரிக்கெட்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அன்றே கணித்த தல என்ற பெயரில் வைரலாக்கி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Being_Kamesh/status/1288482819040190464?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.