நள்ளிரவில் வெளியாகி உள்ளது அஜித் 62 படத்தின் டைட்டில் போஸ்டர்.

Ajith 62 Movie Title Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவியது.

அஜித்தின் பிறந்த நாளான இன்று இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.