அஜித் 62 படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 62 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலக்கப்பட்டதன் காரணமாக இந்த வாய்ப்பை மகிழ்திருமேனி பெற்றுள்ளார்.

இந்தப் படத்திற்கான கதையை விவாதிக்க மகிழ் திருமேணி லண்டன் சென்றிருந்த நிலையில் அங்கு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு அவருக்கு 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை கொடுத்துள்ளது லைக்கா நிறுவனம்.

விரைவில் படத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை மகிழ்திருமேனி படங்களுக்கு அருண் ராஜ் என்பவர் இசையமைத்து வந்த நிலையில் அஜித் 62 படத்தின் மூலம் முதல் முறையாக சாம் சி எஸ் இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.