AK 61 சூட்டிங் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Ajith 61 Shooting And Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் தல 61 படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாங்காங் செல்ல இருப்பதாகவும் இங்கு 21 நாட்கள் சூட்டிங் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடப்பட குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு அஜித் விக்னேஷ் வந் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 படத்தில் நடிக்க தொடங்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.