அஜித் 61 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Ajith 61 Movie Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் வில்லனாக ஜான் கொக்கன் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்னொரு வில்லனாக தற்போது சமுத்திரகனியும் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அஜித்துடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார் சமுத்திரகனி.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் வீரா என்பதை தேர்வு செய்திருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.