அஜித் 61 திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கும் வெளியாகாது அடுத்த வருட பொங்கலுக்கும் வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

தீபாவளியும் இல்ல.. பொங்கலும் இல்லை.. அஜித் 61 படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?? வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் அஜித்தின் கெட்டப்பையும் மாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வருட நவம்பர், டிசம்பர் வரை ஷூட்டிங் நடக்கும் என்பதால் தீபாவளிக்கு படத்தை வெளியிட வாய்ப்பே இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் பொங்கலுக்கு தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாவதன் காரணத்தினால் அப்போது அஜித்தின் படம் போட்டி போட வாய்ப்பு இல்லை. வினியோகிஸ்தர்கள் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.

தீபாவளியும் இல்ல.. பொங்கலும் இல்லை.. அஜித் 61 படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?? வெளியான அதிர்ச்சி தகவல்

இதனால் இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று குடியரசு தின வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை திரைப்படம் பலமுறை தள்ளி போய் ரிலீஸ் ஆனது போலவே இந்த படமும் தள்ளிப் போய் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.