அஜித்துக்கு ஜோடியாக தளபதி விஜயின் ஸ்டைலிஷ் நாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith 61 Movie Heroine Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் உருவாக உள்ள அஜித் 61 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் அடுத்த மாதம் படத்தின் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

தற்போது இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.