Ajith 61 Movie Director
Ajith 61 Movie Director

தல 61 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Ajith 61 Movie Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். வெற்றி, தோல்வி என இரண்டையும் கடந்து இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப்படம் பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதனை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார்.

நீங்க ரொம்ப லேட்.. இது ஒல்டு டிரெண்ட் – வீடியோ வெளியிட்ட மாஸ்டர் பட நடிகையை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 50% மட்டுமே படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டு வந்த இந்த திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் தல 61 படம் குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுவர்தனுடன் இணைய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இப்படம் இவர்களின் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

அமேசான் தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட படையப்பா – காரணம் இதுதான்.!

இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆரம்பம் படத்திற்கு முன்பாகவே அஜித்தும் விஷ்ணுவர்தனும் பில்லா படத்திற்காக இணைந்து இருந்தனர். இப்படம் அஜித்தை ஒரு ஸ்டைலான ஹீரோவாக வெற்றி பெற செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.