பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பேங்க் செட் வெளியே துப்பாக்கி ஏந்தி போலீஸ் ஒருவர் நிற்பது போன்ற வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி கண்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பேங்க் செட்.. துப்பாக்கி ஏந்தி நிற்கும் போலீஸ் - லீக்கான அஜித் 61 சூட்டிங் ஸ்பாட் வீடியோ

இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பேங்க் செட்.. துப்பாக்கி ஏந்தி நிற்கும் போலீஸ் - லீக்கான அஜித் 61 சூட்டிங் ஸ்பாட் வீடியோ

பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகுவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது மிகப் பிரமாண்டமான பேங்க் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு அதன் வெளியே போலீஸ் ஒருவர் துப்பாக்கி நிற்பது போன்ற சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இதோ அந்த வீடியோ