vijay-vikram
கோப்ரா படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு விஜய் ஸ்டைலில் பதிலளித்துள்ளார் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விக்ரமுடன் கே.எஸ் ரவிக்குமார், இர்பான் பதான் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது அஜய் ஞானமுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என கூறியுள்ளார்.

இது குறித்து ரசிகர் ஒருவர் நீங்க எப்ப வேணா ரிலீஸ் பண்ணுங்க, ஆனால் மாஸாக இருக்கணும் என கூறியுள்ளார். இதற்கு அஜய் பிகில் பட ராயப்பன் போட்டோவை வெளியிட்டு பதில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.