பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அத்து மீறிய செயல்கள் ரசிகர்களை எரிச்சலாக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நாமினேஷனுக்கு வரும் ஐஸ்வர்யாவை வெளியேற்ற ரசிகர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இரண்டு வாரமும் அதிக ஓட்டுகள் வாங்கியதாக ஐஸ்வர்யாவை காப்பாற்றி அவரை பைனல் வரை கொண்டு வந்து விட்டனர். இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகையும் முதல் சீசன் போட்டியாளருமான ஆர்த்தி பேசியுள்ளார்.

நாங்க எல்லாம் பிக் பாஸ் வார்த்தைக்கு பயப்படுவோம். ஆனால் இவங்க அவரை மதிப்பதே இல்லை. நான் ஜூலியோடு சண்டை போட்டதால் என்னை வெளியேற்றினீர்கள். கஞ்சா கருப்பு பரணியுடன் சண்டை போட்டதால் வெளியேற்றினீர்கள்.

ஆனால் ஐஸ்வர்யா அனைவரிடமும் சண்டை போட்டும் காப்பாற்றப்பட்டு வருவதை பார்த்தல் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் போல தான் தெரிகிறது என கலாய்த்தெடுத்துள்ளார்.