பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Aishwarya Rajesh Pair With Jithan Ramesh : தமிழ் சினிமாவின் ஜித்தன் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக பிரபலமானவர் ரமேஷ். இந்த படத்தை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகியிருந்த ஜித்தன் ரமேஷ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கும் ஜித்தன் ரமேஷ்.. ஜோடி போடும் முன்னணி நடிகை - யார் அவர் தெரியுமா??
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில், 24-ந்தேதி குடமுழுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அடுத்த சீசன் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது தான் இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய நாற்பதாவது திரைப்படமாக தயாரிக்கிறது. படத்தினை ஒரு நாள் ஒரு கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

Model-களுக்கு Makeup போட இத்தனை பேர்களா? – நீங்களே பாருங்க இந்த வீடீயோ | Tiki Tako Grand Launch

இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.