நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்திலும் வித விதமான ஆடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சிவப்பு நிற ஆடையில் ஆலை மயக்கும் வகையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.