இந்தியன் 2 வில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Aishwarya rajesh explain why not acting in indian2 – ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல தடங்கள்களுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகம் பெற்றுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகவர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

விஜய் படத்தில் இருந்து பாதியில் விலகிய அஜித்.. வெளிவராத ரகசியங்கள் – புகைப்படங்களுடன் இதோ

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ ஒரு திரைப்படத்திற்கு கடந்த வருடம் கால்ஷூட் கொடுத்தேன். அவர்கள் திடீரென ஆகஸ்டு மாதம் கால்ஷீட் கேட்டனர். அப்போது நான் 4 திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால் தேதி பிரச்சனை காரணமாக இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனது.

சினிமா பின்னணி இல்லாமல் திரை உலகிற்குள் நுழைந்த எனக்கு ஷங்கர் சார், கமல் சார் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது மிகப்பெரிய வருத்தம். அதனால் 2 நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை என அவர் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.