Aishwarya Rajesh Beach Video

இரவு நேரத்தில் சென்னை பீச்சில் படித்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Beach Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தமிழில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த இவர் அந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார். அதன்பின்னர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரவு சென்னை பீச்சில் படுத்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு என்ன ஒரு ஃபீல் என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ