நீங்க எல்லாம் ஏன் நடிக்க வரீங்கன்னு கேட்டாங்க என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பனாக பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகம் கண் காட்சியில் கலந்து கொண்ட போது தான் நடிக்க வந்த புதிதில் ஏற்பட்ட அவமானங்கள் குறித்து பேசி உள்ளார்.

அதாவது அறிமுக காலத்தில் சில கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்று நடிக்கவே முடியாது. அப்போது பலர் நீங்க எல்லாம் ஏன் நடிக்க வரீங்க என்று என்னை கேட்டார்கள் என தனக்கு நேர்ந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.