Vijay Sethupathi, Aishwarya

Aishwarya Rajesh : நடிகர் விஜய் சேதுபதிக்கென இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது.

குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் அவருக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதல் அவரை ஒரு சர்ச்சையும் பின்தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

அதாவது விஜய் சேதுபதி தன் படங்களில் மாற்றி மாற்றி ஒருசில நடிகைகளை மட்டுமே நடிக்க வைக்கிறார் என்ற சர்ச்சைதான் அது. காயத்ரி, ரம்யா நம்பீசன், அஞ்சலி என இந்த நடிகைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

அஜித் லாரன்ஸுக்கு இப்படியொரு சென்டிமென்டா – பலரும் கவனிக்காத ஆச்சரியத் தகவல்!

அதிலும் குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஆரம்ப நாட்களில் இவர் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் ஒருகட்டத்தில் அவருடன் இணைந்து நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதுவும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவெல்லாம் இல்லை. நீளமான ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறாராம்.

முன்னணி இயக்குனர்கள் கேட்ட போதிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கால்ஷீட் ஃபுல் என சொல்லும் விஜய் சேதுபதி ஐஷ்வர்யா ராஜேஷ் தன கேரியரின் முக்கியமான படம் என கேட்டுக்கொண்டதால் ரொம்ப சிரமப்பட்டு அக்டோபரில் சில நாட்கள் இந்த படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.