விஜய்யுடன் நடிக்க மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்‌.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகர்களாக வளம் இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே இனைந்து நடித்து அதன் பிறகு இருவரும் தங்களுக்கான தனித்தனி பாதைகளை அமைத்து வெற்றி நடை போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் உடன் ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்த விஷயம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் என்பவர் பேசி உள்ளார்.

ஆமாம், தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை தான் பட குழு அணுகியுள்ளது.

ஆனால் ஐஸ்வர்யா ராய் விஜய் பார்க்க சிறியவராக தெரிகிறார் எனக்கும் அவருக்கும் செட்டாகாது. அஜித் போன்று வேறு நடிகர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அதுதான் பொருத்தமாக இருக்கும் என சொல்லி தமிழன் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பேசி உள்ளார்.

அதேபோல் அஜித் வளர்ந்து வரும் சமயத்தில் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.