Aishwarya Pissay First Indian ever to win
Aishwarya Pissay First Indian ever to win

Aishwarya Pissay First Indian ever to win

FIM எனப்படும் Federation Internationale de Motocyclisme நடத்திய மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பையில் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய இளம் வீராங்கனை ஐஸ்வர்யா(23) முதன் முதலாக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தியில், பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23), FIM மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பையில் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டார்.

இருட்டு அறையில் முரட்டு தனமாக கட்டி தழுவி கொண்ட யாஷிகா, ஐஸ்வர்யா – ரசிகர்கள் கேட்கும் கேள்வியை பார்த்தீங்களா?

துபாயில் நடைபெற்ற முதல் சுற்றில் வெற்றிப் பெற்ற பிறகு, போர்சுகளில் நடந்த ரேஸில் மூன்றாம் இடமும், ஸ்பெயினில் ஐந்தாம் இடமும், ஹங்கேரியில் நான்காம் இடமும் பிடித்த ஐஸ்வர்யா,

ஒட்டுமொத்தமாக ஜூனியர் பிரிவில் 46 புள்ளிகள் பெற்று கோப்பையை வென்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

போர்ச்சுகலில், மூன்று பெண் ரைடர்களில் அவர் மூன்றாவதாக வந்தார், ஸ்பெயினில் 5 பெண் ரைடர்களில் ஐந்தாவதாக வந்தார், ஹங்கேரியில் 4 பெண் ரைடர்களில் நான்காவதாக வந்தார்.

ஐஸ்வர்யா நான்கு சுற்றுகளையும் முழுவதும் முடித்திருந்தாலும், அவற்றில் சில சுற்றுகளில் நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டதற்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

பிகில் பாட்டில் வரும் இந்த பெண் யார் தெரியுதா? – இதோ இந்த நடிகை தான் அது.!

துபாயை தவிர, மற்ற மூன்று சுற்றுகளிலும் பங்கேற்ற ஒரே பெண் போட்டியாளர் ஐஸ்வர்யா மட்டுமே.

இவற்றில் கடைசி இடம் பிடித்த ஐஸ்வர்யா தனக்கு முன் சென்ற போட்டியாளரை விட 50 நிமிடங்கள், 60 நிமிடங்கள் மற்றும் 40 நிமிடங்கள் கூடுதலாக நேரம் அதிகம் எடுத்து சுற்றை நிறைவு செய்திருக்கிறார் என்று FIM குறிப்பிட்டுள்ளது.