நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர் லக்ஷ்மி. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் நாளை 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினருடன் இணைந்து தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து அவர் பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், முதலில் தனக்கு பூங்குழலி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பயமாக இருந்தது. அப்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தன்னிடம் மிகுந்த நம்பிக்கை கொடுத்து, பயப்படாதே உனது கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும், மிக முக்கியமானது. உன்னால் முடியும் என்று மோட்டிவேட் செய்ததாக கூறியிருக்கிறார்.