விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையொடு முடிவு வர உள்ளது. இத்தனை நாளாக போட்டியாளர்களுக்கு கிடைத்த ஓட்டுகள் தொலைக்காட்சிக்களில் ஒளிபரபரப்பப்பட்டு வந்தது.

இந்த ஓட்டுகள் அடிப்படையில் ரித்விகாவே முதலிடத்தில் இருந்து வந்தார். ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரெனெ ஓட்டுகள் எண்ணிக்கை ஒளிபரப்பபடவில்லை. இதனால் மீண்டும் ஒட்டு எண்ணிக்கையில் தில்லு முள்ளு செய்யவே இவ்வாறு செய்வதாக விஜய் டிவியை விமர்சித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் எபிசோடுகள் ஒரு நாள் முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்டு விடும் என்பதால் வாக்கெடுப்பு முடிவடைந்து இருக்கும், அதனால் தான் விஜய் டிவி ஒட்டு எண்ணிக்கையை ஒளிபரப்பவில்லை.

ரித்விகா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா இரண்டாவது இடம், விஜயலக்ஷ்மி மூன்றாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது