Aishwarya Dutta Pair With Mahath

Aishwarya Dutta Pair With Mahath : பிக் பாஸ் பிரபலங்களான மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் மஹத், ஐஸ்வர்யா தத்தா.

இவர்கள் இருவரும் தற்போது புதிய படம் ஒன்றில் ஜோடி சேர உள்ளனர். மேலும் இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட மஹத் இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டீவீட்டை ஹரிஷ் கல்யாண் ரி-ட்வீட் செய்து வாழ்த்து கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here