கண்ணை கவரும் அழகி ஆடையில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்கள் நிறைந்த அழகிய ஆடையில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.