Airtel, Vodafone Idea
Airtel, Vodafone Idea

Airtel, Vodafone Idea – மாதம் தோறும் குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் எண்களுக்கு வரும் கால்களை நிறுத்தக் கூடாது என்று செல்போன் சேவை நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது” .

முன்னதாக தொலைத் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு (TRAI- Telecom Regulatory Authority of India, ) டிராய்யிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறியிருப்பதாவது,

“ஜியோ வருகைக்கு பின்னர் பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ள செல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.35 ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் கால்களை பெற முடியும் என அறிவித்தனர்.

ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர்”.

இந்நிலையில், குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்தக் கூடாது என செல்போன் சேவை நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரம் அதாவது 3நாட்களுக்கு முன்பாகவே வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் என்று டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஜியோ வருகையால், தொலைதொடர்பு நிறுவனங்கள் பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.