அதிமுகவுக்கு தான் எங்க ஓட்டு என மக்கள் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

AIADMK Video About TN Election 2021 : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களின் ஆட்சி காலம் முடிவடைந்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வித்தியாச வித்தியாசமான முறையில் ஒட்டு சேகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது அதிமுக தரப்பில் இருந்து சில பிரச்சார வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்கட்சியினர் மக்களிடம் ஓட்டு சேகரிக்க செல்ல இப்போவே நல்லாட்சி தான் போயிட்டு இருக்கு உங்க கிட்ட பவரை கொடுத்தா எங்க வீட்டுல 16 மணி நேரம் பவர் இருக்காது என பதில் அளித்துள்ளனர்.

அதே போல் தற்போது தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கு என கூறுகின்றனர். அப்போ நாங்க என்ன பண்றது என எதிர் கட்சியினர் கேட்க அமைதியா இருங்க என கூறியுள்ளனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது. சரியான கான்செப்ட் என தெரிவித்து வருகின்றனர். 100% கரெக்டா சொல்லி இருக்காங்க என தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவுக்கு தான் எங்க ஓட்டு.. இணையத்தை கலக்கும் வீடியோக்கள்.!!!