மண்ணின் மைந்தன் எடப்பாடியார்- முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை கொண்டாடும் தொண்டர்கள்..! | EPS | TN Govt

AIADMK Members Wishes to EPS : புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் ஆட்சிக்குப் பின்பு 10 வருடமாகத் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சி புரிவது இதுவே முதல்முறை.

பல்வேறு சோதனைகளுக்கிடையே மீண்டும் கட்சியை ஒருங்கிணைத்து கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் எடப்பாடியார்.

அரசியல் எதிரிகள் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தரங்கெட்ட அரசியல் செய்த போதிலும் சற்றும் துவளாமல் தமிழக மக்களின் நலனுக்காக அல்லும் பகலும் உழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார்.

Edapadi K Palaniswamy

பல பேரிடர்களையும் எதிர்கொண்டு தன்னிகரில்லா ஆட்சி செய்து வரும் அம்மா அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர எடப்பாடியார் தனது கழகத்தை முன்னின்று நடத்திச் செல்கிறார்.

தொண்டர்களுக்காகவே வாழ்ந்து இன்றும் தொண்டர்களின் மன அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருவரின் வழிவந்த எடப்பாடியார் தொண்டர்களின் நாயகனாக, தமிழ் மண்ணின் மைந்தனாக 2021 தேர்தலை எதிர்கொள்கிறார்.