AIADMK Meeting 2020

உங்களை மூன்றும் முறை முதல்வராக்கியது அம்மா ஜெயலலிதா இல்லை சசிகலா தான் என ஒபிஎஸ் பேச்சுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

AIADMK Members Support to EPS : முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனைக்கான செயற்குழு கூட்டம் இன்று இராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

எப்போதும் போல, நிர்வாகிகள் அனைவரும் வந்த பிறகே, மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் வருகை புரிந்தார்.

முதல்வரை அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

ஓபிஎஸ் அங்கு இருந்தாலும், முதல்வருக்கே பெரும்பாலானோர் வணக்கம் தெரிவித்தனர்.

செயற்குழு தொடங்கிய 30 நிமிடங்களிலேயே, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எடப்பாடியார் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் மேகதாது அணை தடை, நீட் தேர்வு விலக்கு, கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கட்சியிலும், ஆட்சியிலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பேசத் தொடங்கினார்.

பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அமைச்சர் தங்கமணி அவர்கள் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என அதிரடி காட்டினார். இதுவே கட்சிக்கும், ஆட்சிக்கும் வரவிருக்கும் தேர்தலுக்கும் வலு சேர்க்கும் என ஆவேசம் அடைந்தார்

அரங்கத்தில் கைத்தட்டலுடன் கூடிய பெரிய ஆராவாரம் எழுந்தது. உடனடியாக மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ஆகியோரும் தங்கள் ஆதரவை பதிவு செய்தனர். அமைச்சர் சரோஜா , மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் இதுவே காலத்தின் தேவை என ஆதரவாக வழிமொழிந்தனர்.

நீட் தேர்வுக்கு யார் காரணம்?? – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

இதுவே 95% உறுப்பினர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது. இதனால் ஓ.பி.எஸ் கடுமையாக கோபமடைந்தார்.

ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக தேனி மாவட்டத்தை சேர்ந்த சையத் கான், கன்னியாகுமரி அசோகன் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

உடனே, மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவின் ஆட்சியை கலைக்க அம்மா அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு ஆதரவளிக்க முடியாது என முழக்கமிட்டனர்.

அம்மாவால் ஓரங்கப்பட்டவர்களான பன்ருட்டி ராமசந்திரன்,ஜே.சி.பி. பிராபாகரன் ஆகியோர் மட்டுமே கமிட்டியில் இடம் கிடைப்பதற்காக லேசாக எதிர்த்தனர்.

தன்னுடையை வளர்ச்சி, தன் குடும்பத்தின் வளர்ச்சி என அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை என ஒருமித்த குரலாக நிர்வாகிகளுக்குள் காரசாரம் விவாதம் தொடர்ந்து நடந்தது.

ஒ.பி.எஸ்ஸின் ஆதரவாளராக கருதப்படும், நத்தன் விஸ்வநாதன் கூட எடப்பாடியாருக்கே ஆதரவாக பேசினார்.

உச்சக்கட்டத்தை நெருங்கிய வாக்குவாதம் இறுதியில் முதல்வருக்கும், துணை முதல்வருக்குமிடையே தொடங்கியது.

ஓ.பி.எஸ் நான் அம்மாவால் முதல்வர் ஆக்கப்பட்டேன். நீங்கள் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டீர்கள் என்று ஆவேசமடைந்தார்.

உடனடியாக பதிலளித்த எடப்பாடியார் நீங்களும் சசிகலாவால் தான் முதல்வர் ஆக்கப்பட்டீர்கள் என அதிரடியாக பதிலளித்து இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடியார் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டங்கள் மக்களுக்கு நல்ல பயனை அளித்து வருகின்றன. ஏன் இந்திய பிரதமரே என் நிர்வாகத் திறமையை பாராட்டி வருகிறார் என்று அதிரடி காட்டினார்.

எடப்பாடியார் பேச்சுக்கு அரங்கமே ஆராவரமளித்து ஸ்தம்பித்தது.

ஓபிஎஸ் வீசிய ஒவ்வொரு பந்துக்கும் அட்டகாசமான பதிலடி மூலம் சிக்ஸருக்கு விளாசினார் முதல்வர்.

மொத்த கட்சியின் ஒற்றைக்குரலாக ஒலித்தார் எடப்பாடி பழனிசாமி

பின்னர் செய்தியாளரை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளர் பெயராக, அம்மா வழியில் திறன்பட ஆட்சி நடத்தும் எடப்பாடியாரின் பெயரே இருக்கும் என அனைத்து முக்கிய நிர்வாகிகளாலும் , கழகத்தினராலும் நம்பப்படுகிறது. அதையே அனைவரும் எதிர்பார்க்கவும் செய்கிறார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.