பக்காவாக தொடங்கிய அதிமுக செயற்குழுக் கூட்டம் - முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு அமோக வரவேற்பு.!!

AIADMK Meet 2020 Election : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று வருகிறார்.

இருப்பினும் அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? கட்சியை வழிநடத்த போவது யாரு? ஆட்சியை வழி நடத்த போவது யார்? என்ற பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

இப்படியான பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் அதன் அலுவலகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கிட்டத்தட்ட 300 நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுக வின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? கட்சியை வழிநடத்த போவது யார் என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி ஆட்சி என இரண்டிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாய்ப்பளிக்கவே தொண்டர்கள் பலரும் ஆசைப்படுவதாக அதிமுக வட்டாரங்களில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த 15 தீர்மானங்கள் என்னென்ன என்பதை அதிமுக தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.