அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.! | EPS

AIADMK CM Candidate 2021 Election : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்று சிறந்த நல்லாட்சியை வழங்கி வருகிறார்.

காலங்கள் ஓடினாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்காக செய்துள்ள குடிமராமத்து திட்டம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் போன்றவை என்றென்றும் மறக்க முடியாதவைகளாக அமைந்துள்ளன.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.!

மிக மிக எளிமையான ஒரு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்து விவசாயிகளின் கஷ்டங்களை நேரில் கண்டு வளர்ந்ததால் இன்று விவசாயிகளுக்கு என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து தன்னுடைய திறமையான செயல்பாடுகளால் வளர்ந்து இன்று முதல்வராக உச்சத்தை தொட்டுள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் அன்புக்குரிய ஒருவராக திகழ்ந்தார்.

முதல்வராக பதவியேற்று அம்மாவின் ஆட்சி சிறப்பாக செயல்படுத்தி நான்கே மாதங்களில் ஆட்சி கலைந்து விடும் என பேசியவர்களின் வாயடைத்து உள்ளார்.

கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி தனக்கென ஒரு நற்பெயரை சம்பாதித்துள்ளார். கட்சி, ஆட்சி என இரண்டிலும் யார் என கோரிக்கைகள் வைத்தாலும் உடனடியாக அதைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் அனைவர் மத்தியிலும் அதிகரித்தது.

இதன் காரணமாக தற்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

மீண்டும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.