AIADMK Candidate List
AIADMK Candidate List

AIADMK Candidate List – சென்னை: வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இவ்வேளையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களின் பட்டியலை தற்போது வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, 20 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. தென் சென்னை : ஜெயவர்தன்
2. காஞ்சிபுரம் : மரகதம் குமரவேல்
3. சேலம் : கே.எஸ்.ஆர்.சரவணன்
4. மதுரை : ராஜ்சத்யன்
5. ஈரோடு : மணிமாறன்
6. தேனி : ரவீந்திரநாத்
7. திருவள்ளூர் : வேணுகோபால்
8. திருவண்ணாமலை : அக்ரி கிருஷ்ணமூர்த்தி
9. ஆரணி : செஞ்சி.ஏழுமலை
10. நாமக்கல் : காளியப்பன்
11. நெல்லை :மனோஜ் பாண்டியன்
12. திருப்பூர் : எம்.எஸ்.எம் ஆனந்தன்
13. நீலகிரி : தியாகராஜன்
14. பொள்ளாச்சி : மகேந்திரன்
15. கிருஷ்ணகிரி : கே.பி முனுசாமி
16. கரூர் :தம்பிதுரை
17. பெரம்பலூர் : என்.ஆர்.சிவபதி
18. சிதம்பரம் : சந்திரசேகர்
19. நாகை : தாளை சரவணன்
20. மயிலாடுதுறை :ஆசை மணி

மேலும் இதில் தென் சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, தேனியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.