AIADMK and DMDK
AIADMK and DMDK

AIADMK and DMDK – சென்னை: அதிமுகவுடன் லோக்சபா தேர்தலுக்காக தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்த இறுதி அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

பாமகவுடன் அதிமுக கூட்டணியில் இணைந்தது அடுத்து தற்போது தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலுக்காக அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க உள்ளது.முன்னதாக இன்று அதிமுக பாமக கட்சியுடன் கூட்டணி இணைந்தது.

மேலும் அதிமுகவுடன் பாஜக ,தேமுதிக மற்றும் பலர் இந்த கூட்டணியில் இணைய இருக்கிறார்கள்.,

இந்நிலையில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.இன்று அதிமுக – பாமக(!) கூட்டணி உறுதியாகி உள்ளது. பாமக – அதிமுக ஒப்பந்தம் இன்று தான் கையெழுத்தானது.

அதன்படி 7 லோக்சபா தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது.இதையடுத்து தற்போது அதிமுகவுடன் லோக்சபா தேர்தலுக்காக தேமுதிக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தை முடிந்தபின் பாமகவுடன் கூட்டணி அறிவித்தது போலவே தேமுதிகவுடன் அதிமுக தனது கூட்டணி அறிவிப்பை இன்று மாலை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.