AIADMK Alliance
AIADMK Alliance

AIADMK Alliance – திண்டிவனம்: பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அதிமுக, இந்த 2 கட்சிகள் மட்டும் இன்றி இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க திண்டிவனம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாவது, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகளை மெகா கூட்டணியாக உள்ளடக்கி உள்ளது.

இதன்படி அம்மா இருக்கும் போது எப்படி வெற்றி பெறச்செய்தீர்களோ, அதே போன்று நான் இல்லை யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் தமிழகத்தில் வளமான எதிர்காலம் அமைவதற்கு அதிமுக வெற்றி பெற வேண்டும் எனவும், அம்மா மறைவுக்கு பிறகு,

கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் திமுகவினர் பல்வேறு வஞ்சக எண்ணத்துடன் பல்வேறு பழியை சுமத்தி வருகின்றனர் எனவும் திமுக மீது விமர்சனம் செய்தார்.

பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, நினைவு மணிமண்டபம் கட்டுவதற்கு பல்வேறு வழக்குகள் போட்ட நயவஞ்சகர்கள் தான் திமுகவினர் என்றும், தலைவர் எம்.ஜி.ஆர் சொன்னது போல திமுக ஒரு தீய சக்தி என்றும் கூறினர்.

இந்நிலையில் “இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர இருக்கின்றன” என தெரிவித்தார்.

அம்மா கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அதிமுக கூட்டணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here