நீட் வேண்டவே வேண்டாம்.. உறுதியாக இருக்கும் அதிமுக அரசு.!! | ADMK | Edappadi K. Palaniswami

AIADMK Against to NEET Exam Tamil nadu : தமிழகத்தில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன‌.

தற்போது இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில நீட்தேர்வு அவசியம் என ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தீர்ப்பால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுநாள் வரை ஆளும் அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

திமுக Vs அதிமுக : நீட் தேர்வு விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? – உண்மை நிலவரங்கள்

ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது என்னமோ அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் தான் என்பது போல தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.

ஆனால் உண்மையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது தான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டது.

நீட் வேண்டவே வேண்டாம்.. உறுதியாக இருக்கும் அதிமுக அரசு.!!

இருப்பினும் ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டார். இதனால் ஓர் ஆண்டுக்கு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

காரணமாக காங்கிரஸ் கட்சியின் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் பா சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரத்தை வழக்கறிஞராக நியமித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீட் கட்டாயம் என்ற தீர்ப்பை பெற்றது.

ஆனால் இந்த தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்து நீட் கட்டாயம் என்ற தீர்ப்பை பெற்றுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நளினி சிதம்பரம் தான். தீர்ப்பு வெளியான பிறகு நீதிமன்றத்தின் வாசலில் நின்றுகொண்டே இனி தமிழகத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்தையும் நான் முடித்து விட்டேன் என பேட்டி கொடுத்தார்.

தற்போதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.