விஜய் டிவியில் இனி இரவு 7 மணிக்கு ஆஹா கல்யாணம் என்ற சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய மெகா தொடர் ஆஹா கல்யாணம் மற்றொரு அற்புதமான கதையை கொண்டதாகும். விஜய் டிவியின் வெற்றித்தொடர்களின் வரிசையில் மேலும் ஒரு விறுவிறுப்பான கதையைக்கொண்ட மெகா தொடர் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. புதிய நிகழ்ச்சிகளை தொடங்குவதன் மூலம் விஜய் டிவி நேயர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறது. இது பல தமிழ் சேனல்களில் இருந்து சற்று விலகி தனித்துவமான கதைகளையும், மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரைம்-டைம் என்று சொல்லப்படும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படும் தொடர்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்திய வெளியீடுகளான ‘சிறகடிக்க ஆசை’, ‘மகாநதி’ ஆகியவை தமிழக நேயர்களின் பார்வையாளர்களின் வரிசைப்படி வெற்றி இலக்கை நோக்கி செல்கிறது.

தற்போது 7 PM ஸ்லாட்டின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகவிருக்கும் ஆஹா கல்யாணம் என்ற பிரமாண்டமான தொடர் பல அறிமுகமான முகங்களை வைத்து எடுக்கப்பட்ட கதையாகும். இது எல்லா வயதினரும் காணும்படி நல்ல கதை மற்றும் தயாரிப்பு கொண்டவகையில் பல திருப்பங்களுடன் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஹா கல்யாணத்தின் கதை:கோடீஸ்வரி மற்றும் அவரது 3 மகள்களான மகாலட்சுமி, ஐஸ்வர்யா, பிரபா ஆகியோர் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

கோடீஸ்வரிக்கு வயது வந்த மூன்று மகள்கள். தன் மகள்களுக்கு பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கோட்டீஸ்வரியின் கனவு . அவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூர்யா மற்றும் அவனது குடும்பத்தினரை சந்திக்கிறாள். சூர்யாவையும் அவனுடைய இரண்டு சகோதரர்களையும் பார்த்த பிறகு, கோடீஸ்வரி தனது மகள்களை சூர்யாவிற்கும் அவனது சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து முயற்சிகளை மேற்கொள்கிறாள்.

அவளுடைய கனவு நிறைவேறுமா, இதனால் இரு குடும்பங்களில் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. அவர்களின் கதை முன்னோக்கி நகரும்போது பல திருப்பங்களையும் பாருங்கள்.

இதில் சூர்யாவாக விக்ரம், கோடீஸ்வரியாக மௌனிகா, கவுதமாக விபீஷ், விஜய்யாக கணேஷ் ராம், மகாலட்சுமியாக அக்‌ஷயா, ஐஸ்வர்யாவாக காயத்ரி, பிரபாவாக பவ்யஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.20 மார்ச் 2023 அன்று திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆஹா கலயாணத்தை விஜய் டிவியில் காணத் தவறாதீர்கள்.

ஆஹா கல்யாணம் சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் ஏற்கனவே இந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.