Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Agathi Keerai : 

• அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு ஏற்ப்படாது.

• அகத்திக் கீரையை வாரம் 1 நாள் சமைத்து உன்ன மலச்சிக்கல் தீரும்.

• அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டு வர இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்.

• கண் நோய் போக அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடிசாப்பிட்டால் கண்நோய் குணமாகும்.

• அகத்திக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை அரைக்கரண்டி எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

• வெந்தயத்தை பாலில் அரைத்து அகத்திக்கீரை சாறு, நல்லெண்ணெய், சேர்த்து தைலமாக்கி தலைகுளித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

• அகத்திக்கீரையை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். இது குடல் புண்ணை சரிசெய்வதோடு வயிற்று புழுக்களையும் அழிக்கும்

• அகத்திக்கீரையை மென்று சாப்பிட தொண்டை வலி குறையும். அகத்தி கீரையை மதிய உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் குறையும்.

அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்….!

• அகத்திக்கீரையுடன் தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பற்று போட்டால் தோல் நோய்கள் குறையும்.

• அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டு வரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது.

அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும்( இளநரை கண்ணெரிச்சல் பித்தம்) அது நல்ல மருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here