Again Full Lockdown in Tamilnadu
Again Full Lockdown in Tamilnadu

ஜூன் 30 முதல் மீண்டும் நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Again Full Lockdown in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

விஜய், கார்த்தி, சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்தடுத்து இயக்கப் போகும் படங்கள் – செம மாஸ் தகவல் இது!

இதனால் இன்று முதல்வருடன் ஆலோசனை நடத்திய மருத்துவ குணம் நிச்சயம் இந்த நான்கு மாவட்டங்களில் அடுத்த 14 நாட்களுக்குள் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இதனையடுத்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

ஆனால் மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், மருந்தகங்கள், அமரர் ஊர்தி ஆகியவைகளுக்கு எவ்வித தடையும் இல்லை என அறிவித்துள்ளது.