மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Again Full Lockdown in India : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வட மாநிலங்களில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருவது உலகத்தையே அஞ்சி நடுங்க வைத்துள்ளது.

மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு? - வெளியான பரபரப்பு தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கை மீறிச் சென்று கொண்டிருப்பதால் முழு ஊரடங்கு கட்டாயம் தேவை என பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் நிலவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் முழு ஊரடங்கு கட்டாயம் என அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் இந்தியா முழுவதும் தேவை. முழு படங்கள் மட்டும்தான் கொரோணா பரவல் செயினை அறுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கடந்த வருடத்தைப் போல மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.