Disadvantage of Coffee :
Disadvantage of Coffee :

Advantage and Disadvantage of Coffee :

காபி குடிப்பது நல்லதா? கெட்டதா?

காலையில் எழுந்ததும் ஒரு காபியில்தான் தங்கள் நாளை இனிதே தொடங்குபவர்கள் ஏராளம். காபி பிடிக்காதவர்கள் மிகக் குறைவு.

ஆனால் காபி உடலுக்கு நல்லதில்லை எனவும் ,குடித்தால் நல்லது என பலவும் நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவற்றின் இருபக்கங்களையும் பார்ப்போம்.

நன்மைகள் :

*சருமத்தை மென்மையாக்கும். *சருமத்தை பொலிவாக்கும்.
* மன இறுக்கத்தை விடுவிக்கும்.
* விரக்தி அடைவதை தடுக்கும்.
* உடனடியாக புத்துண்ர்வு தருகிறது.
* நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது.

* காபி குடிப்பதால் இரைப்பை மற்றும் சிறு நீரக் கற்கள் வராது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

* காற்றில் பரவும் நோய்களை தடுக்கும்.

* ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

* மோசமான வியாதிகளில் ஒன்றான டைப் 2 சர்க்கரை வியாதியை தடுக்கும் என கூறப்படுகிறது.

* ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை.

* சில வகையான புற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.

* இத்தாலியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் காபி குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் 20 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரை குறைகிறது என்று நிரூபித்துள்ளனர்.

தீமைகள் :

* காபியில் காஃபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

* அதிகமாக காபியை சாப்பிட்டால் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் உண்டு.

* ரத்தக் கொதிப்பை உண்டாக்கும்.
* கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும் என்கிறார்கள்.
* ஆர்த்ரைடிஸ் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
* கால்சியத்தை உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

* உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தும். அளவுக்கதிகமான ஈஸ்ட்ரோஜன் தீமையை தரும்.

காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மையும் தீமையும் பார்த்தோம். ஆகவே காபியை அளவோடு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப்புகள் வரை குடித்து,
நமது உடலினை பேணிக்காப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here