Adutha Saattai Movie Review
எம். அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, அறிமுக நடிகர்கள் கௌஷிக், யுவன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அடுத்த சாட்டை.

படத்தின் கதைக்களம் :

சாட்டை படத்தின் அடுத்த பாகமாக அடுத்த சாட்டை திரைப்படம் வெளியாகியுள்ளது. சாட்டையில் பள்ளி சூழலையும் அதை சுற்றி நடக்கும் விசயங்களையும் மிகவும் எதார்த்தமாக கூறி வெற்றியை சுவைத்திருந்தனர்.

அடுத்த சாட்டை படத்தை கல்லூரியையும் கல்லூரியில் நடக்கும் சாதி பிரிவுகளை பற்றியும் பேசும் படமாக உருவாக்கியுள்ளனர்.

கல்லூரியின் முதல்வரான தம்பி ராமையா தமிழ் ஆசிரியராக பணி புரியும் சமுத்ரகனிக்கு குடைச்சல் கொடுக்கிறார், அதே கல்லூரியில் படிக்கும் தம்பி ராமையாவின் மகன் அதுல்யாவை காதலிக்கிறேன் என்ற பெயரில் குடைச்சல் கொடுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சாதிக்கார் மாணவர்களுக்கு மட்டும் ஒரு கயிற்றை கட்டி வேற்றுமை காட்டுகிறார்.

இதையெல்லாம் சமுத்திரக்கனி எப்படி மாற்றியமைக்கிறார் என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சமுத்திரக்கனி இந்த படத்தை மொத்தமாக சுமந்து செல்கிறார். இவருக்கு சரியான வில்லனாக தம்பி ராமையா மிரட்டியுள்ளார்.

அதுல்யா தன்னுடைய ரோலை கனகச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். அறிமுக நடிகர்களான கௌஷிக், யுவன் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பலம்

ஒளிப்பதிவு :

ராசமதியின் ஒளிப்பதிவு ஓகே

எடிட்டிங் :

நிர்மலின் எடிட்டிங் ஷார்ப்

இயக்கம் :

எம். அன்பழகன் சாட்டை படத்தை மிகவும் எதார்த்தமாக கொடுத்திருந்தார். அடுத்த சாட்டை படத்திலும் அதை முயன்றுள்ளார். ஆனால் சில காட்சிகளில் அது ஒர்க் அவுட் ஆகவில்லை.

தம்ப்ஸ் அப் :

1. கதைக்களம்
2. சமுத்ரகனியின் நடிப்பு
3. தம்பி ராமையாவின் நடிப்பு

தம்ப்ஸ் டவுன் :

1. நிறைய லாஜிக்கல் தவறுகள்
2. சமுத்ரகனியின் பேச்சை கேட்டு ஒரே நாளில் சாதி வெறியவர்கள் எல்லாம் திருந்தி விடுகிறார்கள் என்பதெல்லாம் காதில் பூ சுற்றும் கதை தான்.
3. அப்பா கலை கல்லூரி என ஆரம்பத்தில் காட்டியதையே படக்குழு மறந்து விட சில இடங்களின் கல்லூரியின் உண்மையான பெயர் தெரிய வருகிறது.
4. படம் முழுவதும் சமுத்ரகனியின் அட்வைஸ் தொடர்ந்து கொண்டே இருப்பது போதும் விடுங்கப்பா என எண்ண தோன்றுகிறது.

REVIEW OVERVIEW
அடுத்த சாட்டை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
adutha-saattai-movie-reviewமொத்தத்தில் அடுத்த சாட்டை, சாட்டை படம் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு முறை பார்க்கலாம்.