தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அதிமுக.

ADMK Won in Vaalparai : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து திமுக 130க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுகவும் திமுகவும் சளைத்தது அல்ல என்ன என்பதை நிரூபிக்கும் வகையில் 90 தொகுதி களுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக.. வெளியானது வெற்றி அறிவிப்பு

இந்த நிலையில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அதிமுக. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமல் கந்தசாமி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 12,365 வாக்குகளை அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் வால்பாறை பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.