madurai

Madurai : மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் பெண் ஒருவர் பிரச்சினைகள் குறித்து குறை தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணை அதிமுக நிர்வாகி மிரட்டியுள்ளார், இதனால் வடமதுரையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை பேரூராட்சி மேட்டுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பரமசிவம் எம் எல் ஏ, கலெக்டர் வினய், தாசில்தார் சுரேஷ்கண்ணன் ஆகியோர் நேற்று பொதுமக்களிடம் குறைகேட்க சென்றுள்ளனர்.

அச்சமயம், பெண் ஒருவர், ” அதிமுக கட்சியினர் அவர்களின் வீடுகளுக்கு ஒரு குழாய்க்கு 2, 3 குழாய்களை வைத்துள்ளனர்.

ஆனால் எங்களுக்கு தெருவிற்கு ஒரு குழாய் கூட இல்லை” என்று குறை தெரிவித்துள்ளார்.

அப்போது அதிமுக துணை செயலாளர் கல்யாணராமன், அப்பெண்ணிடம் ‘ நீ பேசாதே ‘ என எச்சரித்துள்ளார்.

அதற்கு அப்பெண் ” ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் வீடு தேடி வந்து பேசினீர்கள், இப்போது மட்டும் எங்களை பேசாதே என்று மிரட்டுகிறீர்களா? ” என்று கேட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.