ADMK Sarees 
ADMK Sarees 

ADMK Sarees  : கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஆம்னி பஸ் அலுவலகத்தில் அதிமுக கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் மூட்டை மூட்டையாக இருந்தன.

தகவல் அறிந்து வந்த பறக்கும் படையினர் சேலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு அருகே ஆம்னி பஸ் அலுவலகத்தில் தேர்தலை ஒட்டி, அதிமுக கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் இருப்பதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தகவல் வந்தது.

அதனை தொடர்ந்து, பறக்கும் படையினர் அங்கு நேரடியாக சென்று சோதனையிட்டனர்.

சோதனையில், 11 பண்டல்களில் அதிமுக சின்னம் பொறித்த சேலைகள் இருந்துள்ளது. மேலும் ஒவ்வொரு பண்டலிலும் சுமார் 300 சேலைகள் என மொத்தம் 3,300 சேலைகள் இருந்துள்ளது.

மேலும் சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி பஸ் அலுவலக ஊழியர்களிடம் விசாரித்ததில், திருப்பூரிலுள்ள தனியார் ஜவுளிக்கடையில் இருந்து இந்த சேலைகள் வந்ததாக தெரிவித்தனர்.

ஒரே நாளில் ரூ. 1 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிரடி!

இந்நிலையில் பறிமுதல் செய்த சேலைகளை பறக்கும் படையினர் உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தும் போது, அந்த வழியாக காரில் வந்தவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் தாங்கள் கொண்டுவந்த 2 பார்சல்களை கீழே போட்டுவிட்டு வேகமாக சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், பார்சலை பிரித்து பார்த்த போது அதில் டிடிவி தினகரன் அவர்களின் பெயர் மற்றும் அவரின் புகைப்படம் பொறித்த டி-ஷர்ட்டுகள் இருந்ததை கண்டனர்.

பின்னர் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.