YouTube video

ADMK Reply to Other Political Parties : தமிழகத்தில் இந்த முறை சட்டமன்ற தேர்தல் இருமுனை தேர்தலாக இல்லாமல் பலமுனை தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்டணி கட்சிகள் பேரத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தலில் இவ்வளவு சீட் வேண்டும் என்று அடாவடி அடித்து வருகின்றது. ஆனால் அதிமுக கறாராக பதிலளித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்கள் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல்வர் பழனிச்சாமி அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

ADMK Reply to Other Political Parties

ஆனால் தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்கள் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே சீட்டு பேரத்தை அதிகரிக்கிறது என தெரிந்து கொண்ட அதிமுக 20 முதல் 25 சீட் தான் வழங்க முடியும். அதற்கு மேல் உங்களது இஷ்டம்.

அதே போல் பாமக தங்களுக்கு 50 சீட்டுகளும் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவியும் தேவை என கூறியுள்ளது. ஆனால் அதிமுக அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. உங்களின் பழைய வரலாற்றை நீங்களே நினைத்துப் பாருங்கள் என கறாராக தெரிவித்துள்ளது. அதிகப்பட்சம் உங்களுக்கு 15 சீட்டுகள் தான் தர முடியும் எனவும் கூறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முறை அதிமுக 170 முதல் 180 இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அந்தந்த கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு சீட்டு ஒதுக்கப்படும் என அதிமுக மேலிடம் தெரிவித்துள்ளதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.