ADMK Nomination
ADMK Nomination

ADMK Nomination – சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுவை பெற, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்யும் நிகழ்வு இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸிட், இந்திய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக கூட்டணி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.இந்நிலையில் பாஜக அரசை வீழ்த்துவது குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் தீவிர வியூகம் வகுத்து வருகின்றன.

இருப்பினும் பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து ரகசியமாக பேசி வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து அதிமுக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

விருப்ப மனுக்களை பெறுவது தொடர்பான நிகழ்வு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் விருப்பமனு தாக்கல் செய்வதற்கு 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.