ADMK Minister Watched Draupathi
சர்ச்சைக்குரிய திரௌபதி படத்தை அதிமுக அமைச்சர் பார்த்து பாராட்டியுள்ளார். இதற்கான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADMK Minister Watched Draupathi : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திரௌபதி.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் வரவேற்பு எதிர்ப்பு என இரண்டையும் சமமாக சந்தித்து வரும் இந்த படத்தை பா.ஜ.க- வினர் கொண்டாடி வந்தனர்.

எச். ராஜா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இப்படத்திற்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர்.

குஷ்பூ, சுந்தர் சி திருமணத்தில் பவ்யமாக போஸ் கொடுத்த அஜித் – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படத்துடன் இதோ.!

இந்நிலையில் தற்போது இவர்களை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் சென்னையில் உள்ள போப்டா பிலிம்ஸ் ஸ்டூடியோவில் பார்த்து படத்தை பாராட்டியுள்ளார்.

படக்குழுவினருடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADMK Minister Watched Draupathi