cv shanmugam
விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் இப்போது தமிழக அரசுகளின் நிலையே வேறாக இருந்திருக்கும் என்று அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADMK minister CV shanmugam talk about vijayakanth – விழுப்புரம் மாவட்ட தொகுதிக்குட்பட்ட கஞ்சனூரில் நேற்று தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:

தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுவதற்கு 2011ம் ஆண்டு தேமுதிகவாகிய நீங்கள் போட்ட அடித்தளம் தான் காரணம். அந்த நன்றி விசுவாசத்தை நாங்கள் மறக்கவில்லை நாங்கள் உங்களுடன் கூட்டணி முறித்திருக்கலாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் தலைவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது கிடையாது.

நான் அறை வாங்க தயார் – கவின் நண்பர் போட்ட பதிவு .!

உங்கள் தலைவர் விஜயகாந்தை உயர்ந்த இடத்தில் நாங்கள் வைத்திருக்கிறோம். அவர் கடும் உழைப்பாளி. இன்று மட்டும் அவரின் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் தமிழகத்தின் அரசின் நிலையே வேறாக மாறியிருக்கும். ஒரு வார்த்தை கூட எழுதி வைக்காமல் பேச தெரியாத ஸ்டாலின் இருக்குமிடம் தெரியாமல் போய் இருப்பார். விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, தேமுதிக இணைந்து ஒன்றாக போராடி வெற்றியை ஈட்ட வேண்டும் என்று அவர் பேசினார்.