எங்கள் ஆதரவு முதல்வர் பழனிசாமிக்கு மட்டும் தான்! - அதிமுக தொண்டர்கள் கோஷம் .!! | EPS vs OPS | ADMK

ADMK Members Support to EPS : முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனைக்கான செயற்குழு கூட்டம் இன்று இராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எப்போதும் போல, நிர்வாகிகள் அனைவரும் வந்த பிறகே, மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் வருகை புரிந்தார்.

முதல்வரை அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். ஓபிஎஸ் அங்கு இருந்தாலும், முதல்வருக்கே பெரும்பாலானோர் வணக்கம் தெரிவித்தனர். செயற்குழு தொடங்கிய 30 நிமிடங்களிலேயே, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

OPS Vs EPS in AIADMK
OPS Vs EPS in AIADMK

எடப்பாடியார் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் மேகதாது அணை தடை, நீட் தேர்வு விலக்கு, கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கட்சியிலும், ஆட்சியிலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பேசத் தொடங்கினார்.