தேர்தலில் EPS-க்கு தான் முழு ஆதரவு - அதிமுக மாவட்ட செயலாளர்கள் உறுதி! | EPS Vs OPS | TN Govt

ADMK District Security Support to EPS : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் சசிகலா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கைகாட்ட இவர் முதல்வர் ஆனார்.

அதன்பன்னர் தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியே இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து செயலாற்றி வருகிறார்.

இருப்பினும் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பனிப்போர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரின் தொண்டர்களுக்கு இடையே தொடங்கியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே இரண்டு முறை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். தனக்குப் பிறகு முதல்வராகும் தகுதி அவருக்கு தான் இருக்கிறது என அம்மா கைகாட்டினார். ஆகையால் அவர் தான் முதல்வராக வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று மாவட்டச் செயலாளர்கள் இடம் ஒன்றை நடத்தியுள்ளது.

அந்த ஆய்வில் மாவட்டச் செயலாளர்கள் பலரும் இபிஎஸ் பக்கம்தான் ஆதரவை தெரிவிக்கின்றனர். காரணம் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பொறுப்பில் இருந்தபோது மாவட்டச் செயலாளர்களை ஒருபோதும் கண்டு கொண்டதில்லை என குற்றம் கூறுகின்றனர்.

OPS Vs EPS in AIADMK
OPS Vs EPS in AIADMK

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்சியின் சீனியர்கள் செயலாளர்கள் என அனைவரையும் தேடித் தேடிச் சென்று ஆலோசனை பெறுகிறார். எங்களுக்கான மதிப்பையும் மரியாதையும் கொடுக்கிறார் என கூறுகின்றனர்.

ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய குடும்பத்தை பலப்படுத்துவதில் கவனமாக இருந்ததாகவும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு விவசாயியாக இது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை செய்து வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

தற்போது தங்களுக்கு பன்னீர் செல்வத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறுகின்றனர். கடந்த தேர்தலின் போது அவரின் சொந்த ஊர்களில் தொகுதியிலேயே தேர்தல் பணிகளை சரிவர கவனிக்காததால் தோல்விதான் மிஞ்சியது என சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகையால் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே ஆதரவை தெரிவித்துள்ளனர்.